விழிகள் மூடி
ஒளியின் தரிசனம் ! - என்
கனவுப்புள்ளிகளின் இணைப்பில் - உன்
நினைவலைகள்
நீங்காமலே என்னோடு
நிழலாய் !
உன்
முகம் மறக்கவே
என்
அகம் மறைத்தேன் !
எனை அறியாமலே - என்னுள்
உனை விதைத்தேன்.
விருட்சமாய் வளர்ந்தாய்
வேர் பெருக்கி - என்
நெஞ்சம் பிளந்தாய் - இருந்தும்
பொறுத்தேன் - ஒருபோதும்
வேரறுக்கேன் - என்
உயிரின் உயிரல்லவா நீ !
ஆக்கம்
........இ.ஜேசுராஜ்.